’அன்னா ஹசாரே’வாக அமிதாப்பச்சன்?

’அன்னா ஹசாரே’வாக அமிதாப்பச்சன்?

செய்திகள் 1-Jun-2013 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் ஏராளமான அரசியல் க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கியவர் பிரகாஷ் ஜா. இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘சத்தியாகிரஹா டெமோக்ரசி அண்டர் ஃபயர்’. சமீபத்தில், சமூகநல ஆர்வலர்கள் அன்னா ஹசாரே, கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் முதாலானோர் பங்கேற்று நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை மையப்படுத்தியும், தமிழில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘கோ’ படத்தின் கதையை தழுவியும் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் அன்னா ஹசாரே போன்ற ஒரு பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க, பத்திரிகை நிருபராக கரீனா கபூர் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ராம்பால், மனோஜ் பாய், அமிர்தா ராவ் முதலானோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர்


;