லக்ஷ்மி மேனன் ஃபெயிலா?

லக்ஷ்மி மேனன் ஃபெயிலா?

செய்திகள் 31-May-2013 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கும்கி’, ’சுந்தரபாண்டியன்’ படங்களை தொடர்ந்து லக்‌ஷ்மி மேனன் நடித்து நேற்று வெளியான ‘குட்டிப்புலி’ படமும் நல்ல டாக்-குடன் ஓடிக்கொண்டிருக்க, லக்‌ஷ்மி மேனன் பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனார் என்று ஃபேஸ்புக்கில் தகவல் பரவ, உண்மை நிலவரம் அறிய லக்ஷ்மி மேனனை மொபைலில் தொடர்பு கொண்டோம்.

அப்போது மறுமுனையில் ஃபோனை எடுத்து பேசிய லக்‌ஷ்மியின் தாயார் ,‘‘லக்‌ஷ்மி, ‘குட்டிப்புலி’ பட புரொமோஷன் சம்பந்தப்பட்ட ஷூட்டில் இருக்கிறார்’’ என்றார். அவரிடம், ஃபேஸ்புக்கில் வெளியாகியிருக்கும் செய்தி பற்றி கேட்டபோது, ‘‘அந்த செய்தி பற்றி எங்களுக்கு ஒண்ணும் தெரியாது, லக்ஷ்மி பத்தாம் வகுப்பில் ஃபர்ஸ்ட் கிளாஸ் மதிப்பெண்கள் எடுத்து பாஸாகியிருக்கிறார்’’ என்று மகிழ்ச்சி பொங்க கூறியவரிடம், லக்‌ஷ்மிக்கு ‘டாப் 10 சினிமா’ சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;