'பீட்சா 2'வின் பிரெஞ்ச் ஸ்டைல்!

'பீட்சா 2'வின் பிரெஞ்ச் ஸ்டைல்!

செய்திகள் 31-May-2013 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பீட்சா’வின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘தி வில்லா’ படத்தை, ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ‘சூது கவ்வும்’ புகழ் அசோக் செல்வன் & சஞ்சிதா ஷெட்டி நடிக்க, குறும்பட இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

இப்படம் முழுவதும் சம்பந்தப்பட்ட பங்களா ஒன்றின் இன்டீரியர் டெக்ரேஷன்ஸ் அனைத்தும் பிரெஞ்ச் ஸ்டைலில் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல், ‘பீட்சா’ முதல் பாகத்தின் இரண்டு காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;