காதலுக்கு புது விளக்கம் சொல்லும் படம்!

காதலுக்கு புது விளக்கம் சொல்லும் படம்!

செய்திகள் 31-May-2013 12:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதல் என்பது ஆண்களைப் பொறுத்தவரை விளையாட்டு. ஆனால், பெண்களுக்கு அது உயிர்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, இளமை பொங்கும் கல்லூரி காதல்கதை ஒன்றை படமாக்கி வருகிறார்கள். ஸ்ரீஜித் விஜய், ஹ்ரிஷ், ஷாஃபி, அர்ஜூன், மாளவிகா, சுபிக்ஷா, தீபா என முற்றிலும் புதுமுகங்கள் களமிறங்கும் இப்படத்திற்கு ‘குளு குளு நாட்கள்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். எம். எஸ்.பாஸ்கர், யுவராணி, டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை காதர்ஹாசன் என்பவர் இயக்குகிறார்.

கேமராவை உத்பல் (சாமுண்டி) கையாள, எடிட்டிங்கை மென்டோஸ் ஆண்டனியும், கலையை அர்க்கனும் அழகுபடுத்த, லாரென்ஸ் சிவாவும், பாப்பி ஆகியோர் இப்படத்திற்கு நடனம் அமைக்கிறார்கள். ‘போக்கிரி’ படப் புகழ் வசன கர்த்தா வி.பிரபாகர் வசனம் எழுதியுள்ள இப்படத்தை ‘ரேத்தக் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;