75 கோடி விலை போன தூம் 3!

75 கோடி விலை போன தூம் 3!

செய்திகள் 30-May-2013 5:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் வசூலில் சாதனை படைத்த ‘தூம்’ பட வரிசையில் அடுத்து வரவிருக்கும் ‘தூம் 3’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ‘தூம்’ படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க, ‘தூம் 2’ல் ரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அடுத்து வரவிருக்கும் ‘தூம் 3’ படத்தில் பாலிவுட்டின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் ஆமீர் கான் கதாநாயகனாக நடிக்க, இவருடன் கத்ரீனா கைஃப், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராஃப் முதலானோர் கை கோர்க்க, இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை 75 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது சோனி டிவி நிறுவனம்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கவே, ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருக்கும் விஷயம்தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்! இப்படம் இவ்வளவு பெரிய விலைபோக ஆமீர் கான் என்ற மாஸ் ஹீரோதான் காரணம் என்கின்றனர் அனுபவம் நிறைந்த பாலிவுட் பிரபலங்கள். ‘யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவவம் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கி வருகிறார். வருகிற டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;