நடிகர் சாந்தனு, போலீஸில் புகார்!

நடிகர் சாந்தனு, போலீஸில் புகார்!

செய்திகள் 30-May-2013 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து சாந்தனு கூறும்போது, ‘’எனது இணையதளத்திலும், ஃபேஸ்புக்கிலும் நிறைய ஆண், பெண் ரசிகர்கள் தொடர்பு கொள்வார்கள்.

சமீபகாலமாக என்னை போன்ற ஒரு போலி நடிகர் எனது இணைதளத்தையும், ஃபேஸ்புக் அக்கவுண்டையும் பயன்படுத்தி நிறைய பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். எனக்கும், என் தந்தை பாக்யராஜ் மற்றும் என் தாயார் பூர்ணிமா ஆகியோருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறாரா இல்லை என் பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் சதித் திட்டத்துடன் செயல்படுகிறாரா என்று தெரியவில்லை.

அதனால்தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் சொக்கி போறாண்டி வீடியோ பாடல்


;