இரண்டாகப் பிரிந்த சங்கம்!

இரண்டாகப் பிரிந்த சங்கம்!

செய்திகள் 30-May-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘பெப்சி’யில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகியது. இனி சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்கி தனித்து செயல்ப்பட போவதாக சின்னத்திரை தயாரிப்பளர்கள் சங்கத்தின் தலைவர் திருமதி ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘’சமீபத்தில் பெப்சியிலுள்ள இரண்டு அமைப்புகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, இரண்டு நாட்களாக பெரிய திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டன. எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் பல டி.வி.தொடர்களின் படப்பிடிப்பை நிறுத்தியதால் நாங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறோம்.

மேலும் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அதனால் அவசரமாக சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;