‘ஹிட்’ மேக்கர்!

‘ஹிட்’ மேக்கர்!

செய்திகள் 30-May-2013 9:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் பட்டை தீட்டைப்பட்ட இந்த வைரம், 1990ல் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தனியாக ஜொலிக்கத் தொடங்கியது.

எளிமையான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை என தனக்கென ஒரு ஃபார்முலாவைப் பின்பற்றி கமர்ஷியலாக வெற்றி கண்டவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அத்தனை முன்னணி நட்சத்திரங்களுக்கும் ஹிட் படங்கள் கொடுத்தவர். ‘சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம்’ என தனது படங்களில் நடிக்க வைத்ததன் மூலம் சரத்குமாருக்கு தமிழ்சினிமாவில் தனிப்பாதை அமைத்துக் கொடுத்ததில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கியப் பங்குண்டு.

அனிமேஷன் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தில் இவரின் மேற்பார்வையிலேயே ரஜினியை இயக்கிக் கொண்டிருக்கிறார் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தமிழ்சினிமா கண்ட முக்கிய இயக்குனர்களில் தனி இடம் நிச்சயம் உண்டு இவருக்கு. இன்று பிறந்தநாள் காணும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் அவரின் ரசிர்களோடு கரம் கோர்க்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;