பொங்கலுக்கு டபுள் ட்ரீட்!

பொங்கலுக்கு டபுள் ட்ரீட்!

செய்திகள் 30-May-2013 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘தலைவா’. இப்படத்தில் ஒரு சில வேலைகளே பாக்கி இருக்கும் நிலையில், அடுத்து ‘ஜில்லா’ படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் விஜய். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு, டி இமான் இசை, காஜல் அகர்வால் ஹீரோயின், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் படம்… என பல ஸ்பெஷல்கள் இருக்கும் இப்படத்தை அடுத்த பொங்கல் ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதே நாளன்று ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் தயாரிப்பில் ‘பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் கூட்டணியில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் உருவாகி வரும் ‘ஐ’ படத்தையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆக, ரசிகர்களுக்கு அடுத்த பொங்கல் டபுள் ட்ரீட்டாக இனிக்கப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;