பிரச்சனையில் 'பெப்சி'

பிரச்சனையில் 'பெப்சி'

செய்திகள் 28-May-2013 12:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’பெப்சி’யில் உள்ள ‘கார் டிரைவர்கள் யூனியன்’ சில பிரச்சனைகளால், இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காரணத்தால், இனி ’கார் டிரைவர் யூனியனு’க்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என சமீபத்தில் நடைபெற்ற ’பெப்சி’ பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தினை ’கார் டிரைவர்கள் யூனியனி’ல் உள்ள உறுப்பினர்களுக்கு விளக்குவதற்காக, ‘பெப்சி’யின் பொருளாளர் அங்க முத்து சண்முகம் சென்றுள்ளார். அப்போது, கார் டிரைவர் யூனியனை சேர்ந்த சிலர், சண்முகத்தினையும், அவருடன் வந்திருந்த மற்றொரு நிர்வாகி தனபாலனையும் தாக்கியுள்ளனர்.

இதனால் ‘பெப்சி’ நிர்வாகம் போலீஸிடம் புகார் அளித்துள்ளதோடு, இனி ’கார் டிரைவர்கள் யூனியனு’க்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவினை நிறைவேற்றியுள்ளது. இந்த பிரச்சனைகளால் விஷால் நடிக்கும் ‘பாண்டிய நாடு’ மற்றும் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;