தமிழில் செல்லுலாய்டு!

தமிழில் செல்லுலாய்டு!

செய்திகள் 28-May-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பல தேசிய விருதுகளயும், மாநில அரசு விருதுகளையும் பெற்றதோடு, சினிமா நிருபர்களின் பாராட்டுக்களை பெற்று, வியாபார ரீதியிலும் வசூல் சாதனை புரிந்த படம் ‘செல்லுலாய்டு’. பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கத்தில் பிருத்திவிராஜ், மம்தா மோகன்தாஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் மலையாள சினிமாவின் பிதாமகனான ஜே.சி.டானியலின் வாழ்க்கை வரலாரை சித்தரிக்கும் படமாகும்.

இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டை கொண்டாடி வரும் இத்தருணத்தில் ஜே.சி.டானியலை கௌரவிக்கும் பொருட்டாக ‘செல்லுலாய்டு’ படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கின்றனர். தமிழ் படத்திற்கான பாடல்களை பழனி பாரதி இயற்றுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;