நடிப்பில் கை கோர்க்கும் பாலு – சசி!

நடிப்பில் கை கோர்க்கும் பாலு – சசி!

செய்திகள் 28-May-2013 10:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் சசிகுமார். மற்ற இயக்குனர்களை இயக்க வைத்து ஒரு சில படங்களை தயாரித்து வெற்றி கண்ட சசிகுமார் அடுத்து பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘தலைமுறை’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றும், ஆனால் இதில் சசிகுமார் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், பாலுமகேந்திரா, சசிகுமாரை நடிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்ததால் அதை மறுக்க முடியாமல் சசிகுமார் இப்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘’எனது குரு ஸ்தானத்தில் இருப்பவர் பாலுமகேந்திரா, அவரது விருப்பத்திற்கு மாறாக என்னால் செயல்பட முடியாது’’ என்று கூறியிருக்கிறார். தாத்தா – பேரனுக்கிடையிலான உறவை சொல்லும் இப்படத்தில் பாலுமகேந்திரா தாத்தாவாக நடிக்க, சசிகுமார் அவரது பேரனாக நடிக்கிறாராம். பாலுமகேந்திரா இயக்கும் படம் என்றால் பெரும்பாலும் இளையராஜா தான் இசை அமைப்பார். இந்த படத்திற்கும் அவரே இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;