மலையாள படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

மலையாள படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

செய்திகள் 27-May-2013 11:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக’, ‘மேல்விலாசம்’ போன்ற மலையாள படங்களில் ஏற்கெனவே நடித்திருக்கும் பார்த்திபன், இப்போது நடித்து வரும் மலையாள படங்கள் ‘எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா” மற்றும் ‘பேட் பாய்ஸ்’. தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு ‘புதிய பாதை’யை அமைத்து, வித்தியாசமான படங்களை இயக்கியதோடு மாறுபட்ட நடிப்பிலும் முத்திரை பதித்தவர்.

இதைப் போன்றே மலையாளத்திலும் நடித்து வரும், பார்த்திபன் அடுத்து ஒரு மலையாள படத்தை இயக்க இருக்கிறார். ‘வை ஃபி அல்ல’ என பெயர் வைத்திருக்கும் இப்படம், திருமணமான மாடர்ன் தம்பதியர் பற்றிய நகைச்சுவை கலந்த கதையாம். இப்படம் சமூகத்திற்கு நல்ல ஒரு கருத்தை கூறும் படமாகவும் இருக்குமாம். இதன் திரைக்கதையை பார்த்திபனே எழுதியிருக்க, படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர்


;