‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ நிறுத்தப்பட்டது? என்ன ஆச்சு சிம்பு?

‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ நிறுத்தப்பட்டது? என்ன ஆச்சு சிம்பு?

செய்திகள் 27-May-2013 12:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘மன்னிச்சுக்கோங்க ரசிகர்களே... தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு ஏற்பட்டிருக்கும் சில பிரச்சனைகளால ‘வாலு, வேட்டை மன்னன்’ படங்கள் நிறுத்தப்பட்டது’’ - சிம்பு ‘ட்வீட்’

‘‘சீக்கிரமே ‘வாலு’ பட ஷூட்டிங்ல கலந்துக்க இருக்கேன். இன்னும் 9 நாள் படப்பிடிப்புதான் மீதமிருக்கு... ‘வேட்டை மன்னன்’ படம் 50 சதவீதம்தான் முடிஞ்சிருக்கு. அதைப்பத்தி சீக்கிரமே அறிவிக்கிறேன்’’ - சிம்புவின் அடுத்த ‘ட்வீட்’

அடுத்தடுத்து இப்படி ட்வீட் செய்து தனது ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறார் சிம்பு. அது சரி... சிம்புனாலே பரபரப்புதானே... இப்போது என்ன ஆச்சு அவருக்கு..?

வழக்கமாக சிம்பு படங்கள் லேட்டாவதற்கு அவர்தான் காரணம் என செய்திகள் உலா வரும். ஆனால், ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களைப் பொறுத்தவரை, தான் அதற்குக் காரணமல்ல என்ற உண்மையை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தானே முன்வந்து ‘நிறுத்தப்பட்டது’ என முதலில் ட்வீட் செய்தாராம் சிம்பு. பின்னர், தயாரிப்பு சைடிலிருந்து சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அது ஒரு சுமூகமான முடிவுக்கு வரவே ‘மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம்’ என அறிவித்தாராம்.

இதுபோதாதென்று சமீபத்தில் இமயமலைக்கு வேறு பயணம் செய்து தனது ரசிகர்களை அனுதாபத்தில் ஆழ்த்தியுள்ளார் சிம்பு. சமீபகாலமாகவே சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது என அவரது நட்பு வட்டங்கள் கிசு கிசுக்கின்றன. பார்ட்டி, பப் என ஜாலியாக இருந்த சிம்பு, தற்போது ஆன்மீகம், யோகா என முற்றிலும் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

‘இங்க என்ன சொல்லுது’ங்கிறது சிம்புவுக்கே வெளிச்சம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;