‘ஐ’க்கு வந்த நெருக்கடி?

‘ஐ’க்கு வந்த நெருக்கடி?

செய்திகள் 25-May-2013 4:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏராளமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'பூலோகம்', 'ஐ', 'மரியான்', வல்லினம்', ‘திருமணம் எனும் நிக்காஹ்', 'விஸ்வரூபம் 2' என ஒரே நேரத்தில் ஆறு படங்களைத் தயாரித்து வருகிறது. பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்ற இந்நிறுவனம் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் வெற்றி பெற்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்த படத்தைத் தொடர்ந்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ், ஷங்கர், விக்ரம் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கி வரும் படம் 'ஐ'. விக்ரமுடன் எமி ஜாக்சன், சுரேஷ்கோபி, சந்தானம் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் படமாக்கப்பட்டு வந்த இப்படத்தின் அறுபது சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பண நெருக்கடியால் படம் நின்று போயிருப்பதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்தி உண்மையா, இல்லையா என்பதை விவாத்திற்கு உள்ளாக்குவதைவிட, பிரச்சனைகளிலிருந்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;