யுவன் - கார்க்கியின் 100க்கு 100 சென்டிமென்ட்!

யுவன் - கார்க்கியின் 100க்கு 100 சென்டிமென்ட்!

செய்திகள் 25-May-2013 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

1997ல் தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு, வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படம் நூறாவது படமாகும். அதேபோல், 2009ல் ‘கண்டேன் காதலை’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் மதன் கார்க்கி. சமீபத்தில் வெளிவந்த ‘சேட்டை’ படத்தில் ‘அகலாதே அகலாதே’ எனும் பாடல் இவருக்கு நூறாவது பாடலாக அமைந்தது.

பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள மதன் கார்க்கி, முதல் முறையாக ‘பிரியாணி’ படத்தில் பாடல் எழுதுவதன் மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் கைகோர்க்கிறார். கார்த்தியின் பிறந்தநாளான இன்று ‘பிரியாணி’ படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;