மீண்டும் வாய்ப்பு கொடுத்த உதயநிதி!

மீண்டும் வாய்ப்பு கொடுத்த உதயநிதி!

செய்திகள் 25-May-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றி, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ பேனரில் உதயநிதி ஸ்டாலினை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ‘இது கதிர்வேலன் காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிக்க விறுவிறுப்பாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸே தயாரிக்க இருக்கிறது. ‘படத்தில் யார் யார் பணியாற்ற இருக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;