கார்த்தியின் மறக்க முடியாத நாள்!

கார்த்தியின் மறக்க முடியாத நாள்!

செய்திகள் 25-May-2013 12:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆறு வருடங்கள்.... ஏழே படங்கள்... ஆனால், இன்று தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிஸை கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர். லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் கார்த்திக்கு இந்த மே 25 நிச்சயம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சந்தோஷக் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் கொண்டாடி இருந்தாலும், இந்தப் பிறந்தநாள் கார்த்திக்கு விசேஷமானதுதான். ஆம்... சொந்த பந்தங்கள், நண்பர்கள், ரசிகர்களோடு இந்தப் பிறந்தநாளில் கார்த்திக்கு வாழ்த்துச் சொல்ல புதிதாய் இணைந்திருக்கிறது ஒரு புதிய பூங்கொத்து, அழகிய மகள் உமையாள் வடிவில்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் டீஸர், ரசிகர்களுக்கு நிச்சயம் சரியான பிறந்தநாள் பரிசாக இருக்கும். அதோடு, இயக்குனர் ராஜேஷின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ஹரி இயக்கும் புதிய படம் என கார்த்திக்கான வெற்றிப் படிகள் வரிசையாக காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சந்தோஷ தருணத்தில் ‘டாப் 10 சினிமா’வும் உற்சாகமாகச் சொல்கிறது ‘ஹேப்பி பர்த்டே கார்த்தி’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;