நஸ்ரியா எனும் அழகுதேவதை!

நஸ்ரியா எனும் அழகுதேவதை!

செய்திகள் 24-May-2013 2:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரே ஒரு படத்தின் மூலம் ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்துவிட்டார் நடிகை நஸ்ரியா நசீம். ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானது நல்ல நேரமாக அமைந்துவிட்டதில் சந்தோஷத்தில் மிதக்கும் நஸ்ரியா, தான் முதலில் ‘கமிட்’டான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை ரொம்பவே காதலிக்கிறாராம். ‘‘என்னுடைய முதல் படமான 'திருமணம் எனும் நிக்கா' மிக வித்தியாசமான கதை, நேர்த்தியான படமாக்கப்படும் விதம், மெய் மறக்கச் செய்யும் இசை, காட்சிக்காக செலவழிக்க தயங்காத தயாரிப்பு நிறுவனம், அழகான அரங்கமைப்பு, எனது உடை அலங்காரம் என எல்லாமே இப்படத்தின் மேல் எனக்கு உள்ள காதலை அதிகரிக்கச் செய்கிறது.

அதிலும் தற்போது இப்படத்திற்காக ஹைதராபாத்தில் நடந்துக் கொண்டிருக்கும் ரயில் சம்பத்தப்பட்ட காட்சிகள் முற்றிலும் புதியதாகவும், யதார்த்தமாகவும் இருக்கின்றது. வசனங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என படத்தின் நாயகன் ஜெய் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்திருக்கும் இயக்குனர் நடிகர் பாண்டியராஜன் எங்களை இடை விடாமல் சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார். ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு ரசிகையாகவும் இந்தப் படத்தை நான் மிகவும் எதிர்பார்கின்றேன்’’ என்று கூறுகிறார் கேரள அழகுப் புயல் நஸ்ரியா நசீம். அடுத்த நயன்தாரா ரெடி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;