சந்தோஷத்தில் மிதக்கும் ஜீ.வி.பிரகாஷ்!

சந்தோஷத்தில் மிதக்கும் ஜீ.வி.பிரகாஷ்!

செய்திகள் 24-May-2013 12:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வெயில்’ படத்தின் மூலம் 2006-ல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அடுத்தடுத்து தான் இசையமைத்த படங்கள் ஹிட்டாகவே, முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தார். கமல், சூர்யா தவிர்த்து ரஜினி, விஜய், அஜித், விக்ரம், கார்த்தி, தனுஷ், ஆர்யா உள்பட அத்தனை முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்திருக்கிறார் ஜீ.வி. அறிமுகமான 8 வருடங்களிலேயே கிட்டத்தட்ட 30 படங்களுக்கு இசையமைத்திருப்பதோடு, ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்தின் மூலம் ஹிந்தியிலும் முத்திரை பதித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்த ‘அக்லி’ படம் திரையிடப்பட்டு, சர்வதேச திரைப்பட படைப்பாளிகளிடமும் நல்ல பாராட்டைப் பெற்றதாம். தற்போது, விஜய்யின் ‘தலைவா’, சேரனின் ‘ஜே.கே. எனும் நண்பனின் கதை’ ஆகிய படங்களில் பிஸியாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஜீ.வி, அடுத்ததாக இயக்குனர் பாலா, வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறாராம். இதுதவிர, தனது ஆஸ்தான இயக்குனரான ஏ.எல்.விஜய், ‘தலைவா’ படத்திற்குப் பிறகு இயக்கவிருக்கும் புதிய படத்திற்கும் இசை ஜீ.வி.தானாம். இந்தப் படங்களுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று ஜீ.வி. தெரிவித்திருக்கிறார்.

பாடகி சைந்தவியை வரும் ஜூன் 27-ம் தேதி காதல் திருமணம் செய்ய இருக்கும் இந்த சந்தோஷமான நேரத்தில், ஜீ.வி.யின் புதுப்பட அறிவிப்புகள் அவரைப்போல் அவருடைய ரசிகர்களுக்கும் பெரிய சந்தோஷத்தைத் தரும் என்பது நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலசந்தர் நலம்பெற வாழ்த்திய கமல் - வீடியோ


;