வசூலில் சாதனை புரியும் ஔரங்கசீப்!

வசூலில் சாதனை புரியும் ஔரங்கசீப்!

செய்திகள் 24-May-2013 12:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் மேட்டர் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஔரங்கசீப்’ படத்தின் வசூல்தான்! ஆதித்ய சோப்ரா தயாரிப்பில், அதுல் சபர்வால் இயக்கியிருக்கும் இப்படத்தில் அர்ஜுன் கபூர், சாரேஷ் ஆகா, ரிஷிகபூர், ஜாக்கி ஷெராஃப், அம்ருத் சிங் ஆகியோருடன் மலையாள நடிகர் பிருத்திவி ராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான முதல் நாளே 3.92 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த ஹிந்தி படங்களான ‘கை போச்சே’, ‘கோ கோவா கோண்’, ‘கமாண்டோ’ ஆகிய படங்களின் வசூலை விட ‘ஔரங்கசீப்’ படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கிறதாம். கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ‘ஔரங்கசீப்’ திரைப்படம் முதல் வாரத்திலேயே அந்த தொகையை ஈட்டிவிட்டதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;