நார்வேயில் அல்லு அர்ஜுன், ஸ்ருதி!

நார்வேயில் அல்லு அர்ஜுன், ஸ்ருதி!

செய்திகள் 24-May-2013 2:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘இத்தரம்மாயிலத்தோ’. அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டார் அல்லு அர்ஜுன்.

அடுத்து ‘ரேஸ் குர்ரம்’ என்ற படத்தில் பிரபல இயக்குனர் சுரேந்திர ரெட்டியின் இயக்கத்தில் முதன் முதலாக நடிக்க இருக்கிறார் அல்லு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஸ்ருதி ஹாசன். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நார்வேயில் நடைபெறவிருக்க, இரண்டு பாடல் காட்சிகளை அங்கு படம் பிடிக்க உள்ளனர். இப்படத்தை வெங்கடேஸ்வர ராவ், நல்லம்மாலுபு புஜ்ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;