ஜெயம் ரவியிடம் விஜய் படம்!

ஜெயம் ரவியிடம் விஜய் படம்!

செய்திகள் 24-May-2013 12:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ‘பகலவன்’ என்ற படத்தின் மூலம் நடிகர் விஜய்யும் இயக்குனர் சீமானும் இணைந்து வேலை செய்வதாக இருந்தது. ஆனால், சிற்சில காரணங்களால், அது நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போனது. விஜய்யும் வேறு வேறு படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்க, சீமான் அரசியலில் பிஸியாகிவிட்டார். ஆனால், சமீபத்தில் விஜய் ‘பகலவன்’ படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்தது.

அதைத் தொடர்ந்து இப்படம் ஜீவா, விக்ரம் என ஒவ்வொருவராகச் சென்று யாருக்குமே பொருந்தவில்லை. இந்நிலையில், ‘பகலவன்’ படத்தின் கதையைக் கேட்ட ஜெயம் ரவி, தான் இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக சீமானிடம் கூறி, படத்தில் நடிக்க சம்மதமும் தெரிவித்துள்ளாராம். தற்போது ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் ‘பூலோகம்’, ‘நிமிர்ந்து நில்’ படங்கள் முடிவடைந்ததும், சீமான் - ஜெயம் ரவி இணையும் படத்தின் படிப்பிடிப்பு துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;