மும்பையில் ஜீவா, துளசி நாயர்!

மும்பையில் ஜீவா, துளசி நாயர்!

செய்திகள் 23-May-2013 12:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் தயாரிக்கும் படம் ‘யான்’. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் நடைபெறுகிறது. ‘கடல்’ படத்திற்குப் பிறகு துளசி நாயர் நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க, மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, இந்தியாவின் தலைச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ரவி கே. சந்திரன் இயக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;