சூப்பர் ஸ்டார் பாடிய ஹிந்தி பாடல்!

சூப்பர் ஸ்டார் பாடிய ஹிந்தி பாடல்!

செய்திகள் 23-May-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘கோச்சடையான்’ படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்க, ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். ஹிந்தியில் வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் ரஜினிகாந்த் ஹிந்தியில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். தமிழில் வைரமுத்து எழுதிய இப்பாடலை, ஹிந்தியில் இர்ஷத் கமில் இயற்றியிருக்கிறார். ரஜினிகாந்த் ஹிந்தி மொழியில் பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;