மெகா ஸ்டாருடன் இணையும் ஹனிரோஸ்!

மெகா ஸ்டாருடன் இணையும் ஹனிரோஸ்!

செய்திகள் 22-May-2013 11:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜீவா, திவ்யா ஸ்பந்தனா ஜோடியாக நடித்த ‘சிங்கம் புலி’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ஹனிரோஸ். கேரளாவை சேர்ந்த இவர் முதன் முதலாக நடித்த ‘காந்தர்வன்’ படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் ஹனிரோஸுக்கு ‘தெய்வத்தின்டெ சொந்தம் க்ளீட்டஸ்’ என்ற படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. புதுமுக இயக்குனர் மார்த்தாண்டன் என்பவர் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி நாடக நடிகராக நடிக்க, இப்படத்தை பைசல் என்பவர் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;