மாப்பிள்ளைகளை கடத்தும் மகன்!

மாப்பிள்ளைகளை கடத்தும் மகன்!

செய்திகள் 22-May-2013 11:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் 'சாமி போட்ட முடிச்சு'. நேர்மையான ஆர்.டி.ஓ. அதிகாரிக்கு மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகன். மூத்த மகளை வரன் பார்க்க ,மாப்பிள்ளை வீட்டார் வரவழைக்கப்படுகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் மூத்த மகளை விட்டு விட்டு தங்கையை பெண் கேட்கிறார்கள். இதனால் மனம் உடையும் அக்காவை தந்தை தேற்றுகிறார்.

இந்நிலையில் மகன் பணத்திற்காக மாப்பிள்ளைகளை கடத்தி சம்பிரதாயங்களை மாற்றி மணமுடித்து வைக்கும் தொழில் செய்வது மூத்த மகள் மூலம் தந்தைக்கு தெரிய வருகிறது. இதற்கு பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்களை சொல்லும் விறுவிறு தொடர்தான் ‘சாமி போட்ட முடிச்சு’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;