கலாட்டா கல்யாணம்!

கலாட்டா கல்யாணம்!

செய்திகள் 22-May-2013 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தை தயாரித்த அருண் வைத்தியநாதன், ஆனந்த் கோவிந்தன் இருவரும் இணைந்து தற்போது தயாரித்து வரும் படம் ‘கல்யாண சமையல் சாதம்’. முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இப்படம் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், இணையத்தின் மூலம் தேடப்படும் வரன்கள், திருமண ஏற்பாடுகளில் நடக்கும் கலாட்டாக்கள் என்று இக்கால இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் ஜோடியாக நடிக்க, புதுமுக இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அறிமுகம் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, புதுமுகம் அரோரா என்பவர் இசை அமைக்கிறார்.ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் இருந்து, 'மெல்ல சிரித்தாய்' எனும் ஒரு பாடலை மட்டும் வரும் மே 24 வெளியிடப்பட இருக்கிறது. பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல வெற்றிப்படங்களின் பாடல்களை வாங்கிய திங்க் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் பாடல் உரிமையை வாங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;