திரைப்படமாகும் கிரிக்கெட் சூதாட்டம்!

திரைப்படமாகும் கிரிக்கெட் சூதாட்டம்!

செய்திகள் 21-May-2013 4:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஸ்ரீசாந்தின் வாழ்க்கையை மலையாளத்தில் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். பிரபல திரைக்கதை ஆசிரியர் ஏ.கே.சாஜன் திரைக்கதையில், ‘கிரிக்கெட்’ என்ற பெயரில் தயாராகும் இப்படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்க இருக்கிறார். கேரளாவில் பிறந்து, கடினமான முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொண்டு பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரராக திகழ்ந்த ஸ்ரீசாந்தின் வேகமான வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இப்படம் சித்தரிக்குமாம். அத்துடன், இப்படம் கிரிக்கெட்டுக்கும், சூதாட்ட கும்பலுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுமாம். சமூகத்தில் நடக்கிற சட்டவிரோத நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுவதில் இயக்குனர் ஷாஜி கைலாஸ் பெயர் பெற்றவர் என்பதும், இவர், தமிழில் ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;