சிம்புவின் ஆன்மீக பயணம்!

சிம்புவின் ஆன்மீக பயணம்!

செய்திகள் 21-May-2013 3:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எஸ்.டி.ஆர்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் நடிகர் சிம்பு, தற்போது வி.டி.வி.கணேஷ் தயாரிப்பில் ‘இங்க என்னா சொல்லுது’ படத்தில் நடித்து வருகிறார். சிம்பு, சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் படு பிசியாக இருந்தாலும் யோகா, தியானம் ஆகியவற்றிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அதிகம் பேர் அறியாத விஷயம். இப்போது தியானம், யோகாவை தொடர்ந்து ஆன்மீக வழியிலும் பயணிக்க ஆரம்பித்திருக்கும் சிம்பு சமீபத்தில் ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘’நான் இப்போது ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தி வருகிறேன். தியானம் மற்றும் ஆன்மீகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. இது என்னை மென்மேலும் செம்மைப்படுத்த உதவுகிறது. ஆன்மீகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல, ஞானம் தேடுதலும்தான். நான் இப்போது அந்த தேடுதலில் ஈடுபட்டு வருகிறேன். தூய்மையான காற்றில் கலந்து வரும் ஆன்மீகம் என்னை மேலும் மெருகேற்ற உதவும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;