பிரிவ்யூ தியேட்டரில் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!

பிரிவ்யூ தியேட்டரில் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!

செய்திகள் 21-May-2013 2:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இன்று பிறந்த நாள். சென்னையில் இருக்கும் அவருக்கு காலையிலிருந்தே நிறைய பேர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தனது மனைவி சுசித்ராவுடன் நுங்கம்பாக்கத்திலுள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவ்யூ தியேட்டருக்கு வந்து ‘சூது கவ்வும்’ தழிழ் படத்தை பார்த்து ரசித்ததோடு, படத்தின் இடைவேளையில் கேக் கட் பண்ணி தனது பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டர் அதிபர் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மனைவியும், நடிகையுமான லிசி ப்ரியதர்ஷன், தியேட்டர் மேலாளர் ‘ஃபோர் ஃப்ரேம்ஸ் ’ கல்யாணம் மற்றும் பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;