ஜெனீவாவில் தில்லு முல்லு!

ஜெனீவாவில் தில்லு முல்லு!

செய்திகள் 21-May-2013 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரித்து, எஸ்.மதனின் ’வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் விநியோகம் செய்த படம் ‘எதிர்நீச்சல்’. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டையும், தற்போது ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மதன் தயாரித்து வரும் ‘தில்லு முல்லு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் ஜீன் 1-ஆம் தேதி நடத்த உள்ளனர்.

இதற்காக இரண்டு படக்குழுவினரும் ஜெனீவா செல்ல இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘தில்லு முல்லு’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் புதிய ‘தில்லு முல்லு’வில் ஷிவா கதாநாயகனாக நடிக்க, இஷா தல்வார் கதாநாயகியாக நடித்திருக்க, பிரகாஷ்ராஜ் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;