பீட்சா, சூது கவ்வும் வரிசையில் வி-சித்திரம்!

பீட்சா, சூது கவ்வும் வரிசையில் வி-சித்திரம்!

செய்திகள் 20-May-2013 4:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ சி.வி.குமார் தயாரிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் ‘பீட்சா-2’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘பட்டிணம்’ என்ற படத்தை தயாரித்து வரும் சி.வி.குமார், சமீபத்தில் இளன் பாண்டியன் என்பவர் இயக்கிய ‘வி-சித்திரம்’ என்ற குறும்படத்தை பார்த்திருக்கிறார்.

இந்த படம் அவரை ரொம்பவும் கவர்ந்துவிட, அந்த குறும்படத்தை இப்போது அதே பெயரில், அதே இயக்குனரை வைத்து திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இந்த படத்தில் ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ போன்ற படங்களில் நடித்த சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;