சிங்கத்தை தத்து எடுத்த பிரபல பாலிவுட் நடிகை!

சிங்கத்தை தத்து எடுத்த பிரபல பாலிவுட் நடிகை!

செய்திகள் 20-May-2013 4:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகைகளுக்கு நாய், பூனை மீதெல்லாம் பிரியம் இருக்கும். ஆனால் சிங்கம், புலியையெல்லாம் நேசிக்கும் நடிகைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அனேகமாக இருக்காது. ஆனால் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஒரு சிங்கத்தை தத்து எடுக்கும் அளவிற்கு வன விலங்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

சமீபத்தில் இவர், ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா உயிரியல் பூங்காவிலுள்ள சுந்தரி என்ற சிங்கத்தை தத்து எடுத்து எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். சுந்தரியின் பராமரிப்பு செலவுக்கான பணத்தை உயிரியல் பூங்கா நிர்வாகிகளிடம் வழங்கிய ப்ரியங்கா சோப்ரா, இது குறித்து பேசும்போது, ’’வன விலங்குகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே இதுபோன்ற சில காரியங்களில் ஈடுபடுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். இவர் இதற்கு முன்னும் துர்கா என்ற புலியை தத்து எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;