‘சிங்கம் 2’வின் பிரம்மாண்டம்!

‘சிங்கம் 2’வின் பிரம்மாண்டம்!

செய்திகள் 20-May-2013 3:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜூன் 1-ல் நடைபெறுவதாக இருந்த ‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீட்டை, மறுநாள் ஜூன் 2ம் தேதிக்கு மாற்றியுள்ளார்கள். பல மொழி சினிமா பிரபலங்களும் பங்குபெற இருக்கும் இவ்விழாவினை சென்னை டிரேட் சென்டரில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

‘சிங்கம்’ கன்னட ரீமேக்கில் நடித்த ‘நான் ஈ’ புகழ் சுதீப் இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதேபோல் ‘சிங்கம்’ ஹிந்தி ரீமேக்கில் நடித்த அஜய் தேவ்கனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருக்கும் ‘சிங்கம் 2’வின் டீஸர் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 13 லட்சங்களைத் தாண்டியுள்ள நிலையில், தற்போது இதன் இசை வெளியீடும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதால், ‘சிங்கம் 2’வின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் உட்பட பல பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;