கேரளாவில் தலைவா!

கேரளாவில் தலைவா!

செய்திகள் 20-May-2013 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘தலைவா’. ‘தாண்டவம்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22- ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை கேரளாவில் வெளியிடும் உரிமையை ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு என்பவர் பெற்றுள்ளார். விஜய் நடிக்கும் படங்களுக்கு கேரளாவில் பெரிய மார்க்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;