எப்போது வருவான் மரியான்?

எப்போது வருவான் மரியான்?

செய்திகள் 20-May-2013 12:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி மேனன் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘மரியான்’. காதல், மோதல், சுடான் நாட்டுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் என விறு விறுப்பாக செல்லும் கதையாம் ‘மரியான்’. வித்தியாசமான பல லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளின் டப்பிங் வேலைகள், ‘சிங்க்’ என்ற தொழில்நுட்ப முறையில் படப்பிடிப்பு தளத்திலேயே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காட்சிகளின் டப்பிங் வேலைகளை படப்பிடிப்பு தளத்தில் நடத்த முடியாமல் போக, அந்த வேலைகளை சமீபத்தில் டப்பிங் ஸ்டுடியோவில் நடத்தி முடித்துள்ளனர் படக்குழுவினர். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்க, படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;