'வெயிலு'க்காக பாரிஸ் செல்லும் இயக்குனர்!

'வெயிலு'க்காக பாரிஸ் செல்லும் இயக்குனர்!

செய்திகள் 18-May-2013 3:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மே 23-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு செல்ல இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். ஆனால் படப்பிடிப்புக்காக அல்ல, தன்னுடைய ‘வெயில்’ படத்தை திரையிடுவதற்காக! இதுபற்றி அவர் ஃபேஸ்புக்கில், ‘’வெயில்’ படத்தின் தனிப்பட்ட திரையிடலுக்காக பாரிஸ் செல்கிறேன். ஒரு தனியார் நிறுவனம் பலமுறை தொடர்புகொண்டு, இந்த முறை மறுக்க மனம் இல்லாமல் ஒத்துக்கொண்டேன். பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் ‘வெயில்’ திரையிடபட்டு, கலந்துரையாடல்கள் நடக்கவிருக்கின்றன. நண்பர்களை சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;