அனிருத்தின் ஹிப் பாப் பாடல்!

அனிருத்தின் ஹிப் பாப் பாடல்!

செய்திகள் 18-May-2013 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வணக்கம் சென்னை’. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் முதலானோர் நடிக்க, ‘கொலவெறி’ பாடல் புகழ் அனிருத் இசை அமைக்கிறார்.

படத்துக்கு படம் மாறுபட்ட இசையில், வித்தியாசமான பாடல்களை தந்து வரும் அனிருத்தின் இந்த படத்திற்கான மாறுபட்ட படைப்பு ’தமிழா…’ என துவங்கும் ஹிப் பாப் பாடல்! ‘கொலவெறி’ பாடல் மாதிரி இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெறும் என்கின்றனர். படத்தின் ஆடியோவை ஜூன் மாதம் வெளியிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;