டி.இமான் இசையில் பீரியட் பாடல்!

டி.இமான் இசையில் பீரியட் பாடல்!

செய்திகள் 18-May-2013 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி காட்சிகளை திரையில் பார்த்து ரசித்து நீண்ட நாட்களாகி விட்டது. ரசிகர்களின் அந்த குறையை போக்கும் வகையில் வடிவேலு மீண்டும் நடிக்க வந்து இரட்டை வேடத்தில் கலக்க இருக்கும் படம் ‘தெனாலி ராமன்’. ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்திற்கு இசை அமைப்பது குறித்து டி.இமான் டுவிட்டரில், ’’தெனாலி ராமன்’ படத்தில் வடிவேலுவுடன் பணி புரிகிறேன். அத்துடன் ‘விசில்’ படத்திற்கு பிறகு புலவர் புலமைபித்தன் எழுதிய ஒரு பீரியட் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்த இரண்டு தருணங்களும் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியை தந்துள்ளது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;