’தரமணி’யில் ஆன்ட்ரியா!

’தரமணி’யில் ஆன்ட்ரியா!

செய்திகள் 18-May-2013 1:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கற்றது தமிழ்' படத்திற்குப் பிறகு ராம் இயக்கியுள்ள படம் ‘தங்க மீன்கள்’. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ராம் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார். அடுத்து இவர் இயக்கப்போகும் படத்தில் ஐடி துறையில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கிடையிலான உறவுகள் மற்றும் காதலை பற்றி சொல்ல இருக்கிறார். தற்போது ‘தரமணி’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஆன்ட்ரியா நடிக்க இருக்கிறார். இந்த படத்திலும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் கை கோர்க்க இருக்கிறார் இயக்குனர் ராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;