மே 25-ல் 'பிரியாணி' டீஸர்!

மே 25-ல் 'பிரியாணி' டீஸர்!

செய்திகள் 17-May-2013 6:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘பிரியாணி’. ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி அமரன், ராம்கி முதலானோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் முதல் டீஸர் கார்த்தியின் பிறந்த நாள் தினமான மே 25-ஆம் தேதி வெளியாகிறது. வெங்கட் பிரபு, கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, யுவன் சங்கர் ராஜா இணைந்து உருவாக்கியிருக்கும் ‘பிரியாணி’யை சுவைக்கக் காத்திருங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;