ஜப்பானில் ஷூட்டிங் நடத்த வேண்டுமா?

Should we shoot in japan

செய்திகள் 17-May-2013 5:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜப்பானில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹோட்டலை நிறுவி, ஜப்பானியர் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளவர் கணேசன் ஹரி நாராயணன். ஜப்பான் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கும் இவருக்கு ஜப்பான் - டோக்கியோ மகாண முதல்வர் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறது.

இதனால் இவர், இந்தியாவிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு செல்லும் மக்களுக்கு இடையில் ஒரு பாலமாக இருந்து நிறைய உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் படப்பிடிப்பை ஜப்பானில் நடத்த, ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டது இவர்தான். இது குறித்து கணேசன் ஹரி நாராயணன் கூறும்போது, ‘’தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து பல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், வாசு உட்பட பல இயக்குனர்கள் என்னை அணுகியுள்ளனர். ஜப்பானில் படப்பிடிப்பு நடத்த மட்டுமில்லாமல், எந்த உதவி தேவைப்பட்டாலும் அதை செய்து தர நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜப்பானில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவரது ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜப்பானிலுள்ள டோக்கியோவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளையும் கணேசன் ஹரி நாராயணன் தான் முன் நின்று செய்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;