கேடி 50, விஸ்வரூபம் 100

Kedi billa killadi Ranga 50 days , Viswaroopam 100 days

செய்திகள் 17-May-2013 12:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், விமல், பிந்து மாதவி, ரெஜினா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. ‘பசங்க’ பாண்டிராஜ் மற்றும் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதனும் இணைந்து தயாரித்த இந்த படத்தை ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் வெளியிட்டிருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் இன்று 50-வது நாளை எட்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோல கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து பெரும் எதிர்பார்போடு வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்’. இந்தப் படமும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாக ஓட, இன்று 100-வது நாளை எட்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;