விரைவில் திருமணம் – பிபாஷா பாசு!

விரைவில் திருமணம் – பிபாஷா பாசு!

செய்திகள் 17-May-2013 11:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜிசம்’, ‘தூம்’ என பல படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபல நடிகை ஆனவர் பிபாஷா பாசு. இவர் நேற்று சொந்த வேலை நிமித்தமாக கேரளா - கொச்சி நகரத்துக்கு வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, ‘உங்களுக்கு கேரளாப் பிடிக்குமா?, உங்கள் திருமணம் எப்போது?, இப்போது நீங்கள் நடித்து வரும் படம் என்ன?’ போன்ற பல கேள்விகளை கேட்க, அதற்கு பதில் அளித்த பிபாஷா பாசு, ‘’மும்பையில் இப்போது ஹாட் கிளைமேட், இங்கு கிளைமேட் நல்லா இருக்கு, கேரளா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அது மட்டுமில்லாமல் என் சகோதரியை திருமணம் செய்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு கேரளாவுடன் ஏற்கெனவே தொடர்பு இருக்கு, நான் இப்போது விக்ரம் பட் இயக்கத்தில் ‘கிரியேட்டர்’ என்ற படத்தில் நடிக்கிறேன்’’ என்று கூறியதுடன், ‘’என்னோட திருமணம் விரைவில் நடக்கும்’’ என்றும் சொல்லியிருக்கிறார். இவர் தமிழில் ‘சச்சின்’ படத்தில் விஜய்யுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;