1000 வருடங்களில் பூமியின் நிலை...?

1000 வருடங்களில் பூமியின் நிலை...?

செய்திகள் 17-May-2013 10:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தி பெர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ படத்திற்குப் பிறகு வில் ஸ்மித்தும், அவரது மகன் ஜேடன் ஸ்மித்தும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘ஆஃப்டர் எர்த்’. கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கியிருக்கிறார். ஒரு பயணத்தின் போது ஏற்படும் ஒரு விண்வெளி விபத்தில் தந்தையும் மகனும் ஒரு பயங்கர கிரகத்திற்குள் சென்று விழுந்துவிடுகிறார்கள்.

மனிதர்களுக்கு எதிரான பல சக்திகள் உள்ள அந்த கிரகம், வேறு எதுவும் அல்ல... நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியே இன்னும் 1000 வருடங்களில் அப்படி மாறிப் போயிருப்பதாகக் காட்டியிருக்கிறார்களாம். அமெரிக்காவில் மே 31ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘ஆஃப்டர் எர்த்’ திரைப்படம், இந்தியாவில் ஜூன் 7ம் தேதி வெளிவரவிருக்கிறது. அதேபோல் தமிழிலும் ஜூன் 7ம் தேதி வெளிவரும் இப்படத்திற்கு ‘அபாய கிரகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;