கான், பச்சன் நடிகர்களுடன் கை கோர்க்கும் மல்லுவுட் நடிகர்!

கான், பச்சன் நடிகர்களுடன் கை கோர்க்கும் மல்லுவுட் நடிகர்!

செய்திகள் 16-May-2013 5:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடன இயக்குனர், நடிகை, திரைப்பட இயக்குனர் என பாலிவுட்டில் பிரபலமான ஃபாரா கான் தற்போது இயக்கி வரும் ஹிந்தி படம் ‘ஹேப்பி நியூ இயர்’. இப்படத்தில் ஷாருக் கான், அபிஷேக் பச்சன், ப்ரியங்கா சோப்ரா, ஜாக்கி ஷெராஃப், சித்தார்த் மல்ஹோத்ரா என பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் நடிக்க இவர்களுடன், ‘மல்லுவுட் ஹீரோ’ பிருத்திவி ராஜும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் கதைப்படி நடனம் தெரியாத மூன்று நண்பர்கள் ஷாருக் கான், அபிஷேக் பச்சன், பிருத்திவி ராஜ்.

இவர்கள் மூன்று பேரும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நடனம் தெரியாத இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளும், திருப்பங்களும்தான் படத்தின் கதை. இப்படத்தை ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. பிருத்திவி ராஜ் ஏற்கெனவே அபிஷேக் பச்சனுடன் மணிரத்னத்தின் ‘இராவண்’ ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;