பிரபல தாதாவாக நடிக்கும் பாலிவுட் ஹீரோ!

பிரபல தாதாவாக நடிக்கும் பாலிவுட் ஹீரோ!

செய்திகள் 16-May-2013 11:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கல் ஹோ நஹோ', 'சலாம் – இ - இஷ்க்' போன்ற பல ஹிந்திப் படங்களை இயக்கிய நிகில் அத்வானி தற்போது இயக்கி வரும் படம் 'டி-டே'. 1993-ல் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியை வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் பிரபல தாதா தாவூத் இப்ராகிம் வேடத்தில் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் நடிக்கிறார். ஒரு காலத்தில் ஹிந்தி திரைப் படங்களில் பெரிய ஹீரோவாக வலம் வந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க வந்து மாறுபட்ட வேடங்களில் தோன்றி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவருடன் நம்ம ஊர் ஸ்ருதி ஹாசன் மற்றும் அர்ஜுன் ராம்பால், இர்ஃபான், நாசர் ஆகியோரும் நடிக்க, சங்கர் இஷான் லாய் இசை அமைக்கிறார். பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;