சி.பி.ஐ.ஆபீஸர் ஆகிறார் சரத்குமார்!

சி.பி.ஐ.ஆபீஸர் ஆகிறார் சரத்குமார்!

செய்திகள் 14-May-2013 4:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்பவர்களில் நடிகர் சரத்குமார் குறிப்பிடத்தக்க ஒருவர். வில்லனாக நடிக்க ஆரம்பித்து, பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் கலக்கிய இவர், சமீப காலமாக கதையில் முக்கியத்துவமுள்ள குணச்சித்திர வேடங்களில் தோன்றி நடிக்க தயங்குவதில்லை. இதற்கு உதாரணமாக இவர் நடித்த, ‘பழசிராஜா’, ‘காஞ்சனா’, ‘சென்னையில் ஒரு நாள்’ விரைவில் திரைக்கு வரவிருக்கும் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ போன்ற பல படங்களைச் சொல்லலாம்.

இந்த வரிசையில் சரத்குமார் அடுத்து குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க இருக்கும் படம் ‘நிமிர்ந்து நில்’. கே.எஸ்.சீனிவாசன் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தில் தமிழில் ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடிக்க, அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் தயாராக இருக்கும் படத்தில் நானி கதாநாயகனாக நடிக்க, சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் சி.பி.ஐ.அதிகாரியாக தோன்றி நடித்து கலக்க இருக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;