கௌதம் கார்த்திக்குடன் கை கோர்க்கும் ப்ரியா ஆனந்த்!

கௌதம் கார்த்திக்குடன் கை கோர்க்கும் ப்ரியா ஆனந்த்!

செய்திகள் 14-May-2013 2:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்திற்காக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘வை ராஜா வை’. ‘கடல்’ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இப்போது அந்த வாய்ப்பு ப்ரியா ஆனந்துக்கு கிடைத்திருக்கிறது. இவர் தனுஷ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தவர் என்பதும், தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் ‘வணக்கம் சென்னை’ படத்தில் சிவாவுடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மியூசிகல் என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகி வரும் ‘வை ராஜா வை’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்


;